ஜே 8 மாநாட்டில் பங்கேற்று கிருஷ்ணகிரி மாண&#

Started by Power of silence, Jul 17, 2009, 06:29 PM

Previous topic - Next topic

Power of silence

சென்னை: ரோம் நகரில் நடந்த சிறுவர்களுக்கான ஜே 8 மாநாட்டில் இந்தியாவின் சார்பில், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன் கலந்து கொண்டு, தாயகம் திரும்பியுள்ளான். யுனிசெப் அமைப்பு மற்றும் இத்தாலிய அரசு இணைந்து ஜே 8 என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளது.


உலகின் மிக முக்கிய பிரச்னைகள் பற்றி 18 வயதுக்குட்டவர்கள் விவாதித்து, அவர்கள் தங்கள் முடிவுகளை ஜி 8 மாநாட்டில் உள்ள தலைவர்களிடம் தெரிவிப்பதே இந்த திட்டம். இந்த மாநாடு கடந்த 6ம் தேதி ரோம் நகரில் நடந்தது. ஜி 8 மாநாட்டில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து ஜி 8 நாடுகள் மற்றும் இந்தியா உள்ளிட்ட ஜி 8 உறுப்பினரல்லாத நாடுகளைச் சேர்ந்த சிறுவர்கள் விவாதிப்பதற்காக இம்மாநாடு கூட்டப் பட்டது. இம்மாநாட்டின் பிரதான விவாதப் பொருளாக, "தற்போதைய உலகப் பொருளாதார நெருக்கடியில் குழந்தைகளின் உரிமைகள்' என்ற தலைப்பு எடுத்துக் கொள்ளப்பட்டது. இம்மாநாட்டில் இந்தியா சார்பில் மூன்று பேர் கலந்து கொண்டனர். அதில், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சாமுவேல் வெங்கடேசன்(17) இடம் பெற்றார்.


இவர், கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி கிராமத்தைச் சேர்ந்தவர். சாமுவேல் கூறியதாவது: வளர்ந்த நாடுகளில் உள்ள சிறுவர்களுக்கும், வளரும் நாடுகளில் உள்ள சிறுவர்களுக்கும் முற்றிலும் வேறுபட்ட சிந்தனைகள் உள்ளன. சிறந்த கல்வியைப் பெற்றுள்ள அவர்களுக்கு, படிப்பைத் தாண்டி கேளிக்கைகளில் ஈடுபடுவதே முக்கியத் தேவையாக உள்ளது. ஆனால், வளரும் நாடுகளில் உள்ள குழந்தைகள், அடிப்படைக் கல்வி பெறவே மிகவும் சிரமப்படுகின்றனர். பெண் குழந்தைகளுக்கு சிறப்பு உரிமைகள் வழங்குதல் குறித்த விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும் என்பது எனது குறிக்கோள். எனது கிராமத்தில் என் நண்பர்களைக் கொண்டு குழு அமைத்து இப்பணியில் ஈடுபட உள்ளேன். என் கருத்துக்களை, அனுபவங்களை எடுத்துச் சொல்ல வாய்ப்பாக இந்த மாநாடு அமைந்தது. வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்களுடன் என் எண்ணங்களை பகிர்ந்து கொண்டது ஒரு புதிய அனுபவம். இவ்வாறு சாமுவேல் கூறினார்.