பஜாஜ் நிறுவனத்தின் 100 சிசி டிஸ்கவர் பைக் அற&

Started by sharmila banu.m, Jul 16, 2009, 01:21 PM

Previous topic - Next topic

sharmila banu.m

பஜாஜ் நிறுவனத்தின் 100 சிசி டிஸ்கவர் பைக் அறிமுகம்


சென்னை:பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் 100 சிசி திறன்கொண்ட 'டிஸ்கவர் பைக்' அறிமுகப்படுத்தப் பட்டது. இதற்கான அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. மேம்பட்ட 2.0 டி.டி.எஸ்., - எஸ்.ஐ., தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த வகை பைக்குகள், இம்மாத இறுதியில் விற்பனைக்கு வருகிறது.அறிமுக நிகழ்ச்சியில், நிறுவனத்தின் துணை பொது மேலாளர் சந்திரசேகர் பேசியதாவது: வாடிக்கையாளர் எதிர்பார்ப்புக்கும், தற்போது சந்தையில் விற்பனையாகும் பைக்கிற்கும் நீண்ட இடைவேளை நிலவுகிறது. தினசரி 50 கி.மீ., தூரம் பயணம் செய்வோருக்கு ஏற்ற வகையிலும், நீண்ட தூரம் பயணம் செய்வதற்கேற்ற வகையிலும் இந்த புதிய பைக் வடிவமைக்கப் பட்டுள்ளது. மேலும், அதிகபட்ச மைலேஜ் மற்றும் நீண்ட காலம் உழைக்கக்கூடிய வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.நிறுவனத்தின் ஆராய்ச்சிப் பிரிவின் நீண்ட கால ஆராய்ச்சிக்குப் பிறகு, இத்தகைய சிறந்த ஆற்றல் கொண்ட பைக் உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சந்தையில் உள்ள 100 சிசி பைக்குடன் ஒப்பிடுகையில், இது மிகச் சிறந்தது என்பதில் சந்தேகமில்லை. தற்போதைய விழாக்கால சீசனில் இரண்டு லட்சம் பைக்குகளை விற்பனை செய்ய நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.இவ்வாறு சந்திரசேகர் கூறினார்.