மம்தா உதவிக்கு லாலு ஆள்

Started by aruljothi, Jul 13, 2009, 12:52 PM

Previous topic - Next topic

aruljothi

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் தக்சின் முன்னேவர்; பதவி என்னவோ ஊடக ஆலோசகர்; ஆனால், ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் இருந்தபோது, அவருக்கு இவர் தான் அதிகார மையத்தில், "டோட்டல்' வலது கரம். இவர் இல்லாமல், லாலுவின் எந்த "ஸ்டேட்மென்ட்'டும் வராது. லாலு போய், புதிய அமைச்சராக மம்தா பானர்ஜி பொறுப்பேற்றவுடன், இவருக்கு சற்று நடுக்கம் இருக்கத்தான் செய்தது.எப்படியும், தன்னை தூக்கியடித்துவிடுவார் என்று தான் நினைத்தார். ஆனால், அவருக்கு இன்ப அதிர்ச்சி. மம்தாவிடம் இருந்து அழைப்பு வந்தது. "மீடியா அட்வைசர் பதவியில் நீங்கள் தொடருங்கள்' என்று கேட்டுக்கொண்டார். முன்னேவருக்கு வியப்பு தாங்கவில்லை; அவருக்கு மட்டுமல்ல, பத்திரிகையாளர்களுக்கும் தான்.பின்னே, அமைச்சர் லாலு, ஆமதாபாத் ஐ.எம்.எம்.,மில் மேலாண்மை பட்டதாரி மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கப் போகிறார்... அமெரிக்காவில் இருந்து வந்த பல்கலைக்கழக மாணவர்களிடம் பேசப்போகிறார் என்றெல்லாம், படு பந்தா அறிக்கைகளை விட்டவர் யாருன்னு நினைக்கிறீர்கள்; இவர் தான்.அதுமட்டுமல்ல... ரயில்வே, உலக மகா சாதனை படைத்ததாக லாலுவுக்கு புகழாரம் சூட்டக்காரணம், இவர் விட்ட அறிக்கைகள் தான்.அப்ப, மம்தாவும் சாதனை படைக்கப்போகிறாரோ?