கற்பழிப்பு புகாரை ஏற்க மறுத்த பெண் எஸ்.ஐ.,க&#

Started by aruljothi, Jul 04, 2009, 09:42 PM

Previous topic - Next topic

aruljothi

அரியலூர்: கற்பழிக்கப்பட்ட பெண்ணின் புகாரை ஏற்க மறுத்த இரண்டு பெண் எஸ்.ஐ., உள்ளிட்ட ஐந்து போலீசாரை சஸ்பெண்ட் செய்து, அரியலூர் எஸ்.பி., நஜ்முல் ஹோடா உத்தரவிட்டுள்ளார்.


அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே, குருவாடி காலனி தெருவைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சந்திரகாசன் மகள் ராஜேஸ்வரி(22). பெற்றோர் வயல்வேலைக்குச் சென்றிருந்த நிலையில், கால் ஊனமுற்ற ராஜேஸ்வரி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். ராஜேஸ்வரி தனிமையில் இருப்பதை அறிந்த, அதே தெருவைச் சேர்ந்த வாலிபர் தேவேந்திரன்(23), வீட்டுக்குள் நுழைந்து ராஜேஸ்வரியை மானபங்கபடுத்தி, பலவந்தமாக கற்பழித்து விட்டு தலைமறைவாகி விட்டார். கடந்த ஜூன் 30ம் தேதி பகல் ஒரு மணிக்கு நடந்த இச்சம்பவத்தை அடுத்து, ராஜேஸ்வரி தன் பெற்றோருடன் தூத்தூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் கொடுக்கச் சென்றார். அவரது புகாரை வாங்க மறுத்த எஸ்.ஐ., கலைவாணி, அரியலூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பி வைத்தார். ராஜேஸ்வரி புகார் அங்கும் ஏற்கப்படாமல், ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பப்பட்டார்.


அங்கும் புகார் மனு ஏற்கப்படாத நிலையில், உடல்வலி தாங்க முடியாமல் இளம்பெண் ராஜேஸ்வரி அவதிப்பட்டதால், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன்பிறகு, மருத்துவமனையிலிருந்து கொடுக்கப்பட்ட தகவலையடுத்து, ஜூலை 1ம் தேதி மாலை, தூத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கற்பழிக்கப்பட்ட கால் ஊனமுற்ற ராஜேஸ்வரி கொடுத்த புகாரை ஏற்க மறுத்தது குறித்து போலீஸ் உயரதிகாரிகள் விசாரணை நடத்தினர். தூத்தூர் போலீஸ் எஸ்.ஐ., கலைவாணி, ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் எஸ்.ஐ., மலர்கொடி, போலீஸ் கான்ஸ்டபிள்கள் தூத்தூர் பாண்டியன், ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் சித்ரா, அரியலூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் அமுதா உள்ளிட்ட ஐந்து பேரை சஸ்பெண்ட் செய்து, அரியலூர் எஸ்.பி., நஜ்முல் ஹோடா உத்தரவிட்டார்.