சென்னையில் உற்பத்தியை அதிகரிக்கும் ஹூன்

Started by rajoe, May 21, 2009, 04:03 PM

Previous topic - Next topic

rajoe

சென்னையில் உற்பத்தியை அதிகரிக்கும் ஹூன்டாய்

சமீபகாலமாக ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள சாதகமான சூழ்நிலைகளை தொடர்ந்து சென்னையில் உள்ள தனது தொழிற்சாலையில் வரும் ஜூன் 10ம் தேதி முதல் மீ்ண்டும் மூன்று ஷிப்ட் முறையில் கார் தயாரிப்பை அதிகரிக்க ஹூண்டாய் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

டாடா நிறுவனம் இந்த ஆண்டு நானோ கார்களை அதிக அளவில் உற்பத்தி செய்ய இருப்பதால் ஹூண்டாய் தனது இடத்தை தக்க வைக்க இந்த முயற்சியில் இறங்குகிரது.

இந்திய சந்தையில் தற்போது தனக்கு இருக்கும் இரண்டாவது இடத்தை டாடாவிடம் இழந்துவிடக்கூடாது என்பதால் ஹூண்டாய் சென்னையில் உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

மேலும், பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரியா போன்ற ஐரோப்பிய நாடுகளில் பழைய கார்களை விற்றுவிட்டு பெட்ரோலை அதிகம் செலவழிக்காத சுற்றுப்புற சூழலுக்கு உகந்த புதிய ரக கார்களை ரூ. 65 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சத்து 70 ஆயிரம் விலையைக் குறைத்து விற்கவும் ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது.

இதனால் ஐரோப்பாவில் இருந்து தங்களுக்கு வரும் ஆர்டர்கள் அதிகரிக்கும் என ஹூண்டாய் எதிர்பார்க்கிறது. மேலும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் சவுதி அரேபியாவில் ஆகிய நாடுகளில் தனக்கென்று புதிய சந்தையை உருவாகவும் முயன்று வருகிறது.

கடந்த ஆண்டுகளாக போதிய ஆர்டர்கள் கிடைக்காத காரணத்தால் ஸ்ரீபெரும்புதூர் கார் தொழிற்சாலையில் உற்பத்தியை இரண்டு ஷிப்ட்களாக குறைந்த அந்த நிறுவனம் தற்போது மீண்டும் முழுவீச்சில் உற்பத்தியை துவக்க இருக்கிறது.

இந்த மூன்றாவது ஷிப்ட் உற்பத்தி துவக்கப்பட்டால் தினசரி உற்பத்தி சுமார் 200லிருந்து 300 வரை அதிக கார்களை தயாரிக்க முடியும். மொத்தமாக ஒரு நாளைக்கு 1300 கார்கள் தயாரிப்பு என்ற நிலையை ஹூண்டாயி்ன் இந்தத் தொழிற்சாலை எட்டும்.

இதன்மூலம் ஹூன்டாய் நிறுவனம் இந்த ஆண்டு 6 லட்சத்து 30 ஆயிரம் கார்களை உற்பத்தி செய்ய உத்தேசித்துள்ளது. இதில் 2 லட்சத்து 80 ஆயிரம் கார்களை இந்தியாவில் விற்க திட்டமிட்டுள்ளது.

source:thatstamil