முடக்கியது பூகம்பம்; மலர வைத்தது காதல்*ஜோ&#

Started by OmMuruga, Jan 19, 2009, 08:07 PM

Previous topic - Next topic

OmMuruga

ஆமதாபாத்:பூகம்பத்தால் உருக்குலைந்து போன இளம் பெண்ணின் வாழ்க்கையில், அவருக்கு ஏற்பட்ட காதல் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தில் 2001 ஜனவரி 26ம் தேதி பயங்கரமான பூகம்பம் ஏற்பட்டது. இதில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.குஜராத் பூஞ்ச் என்ற பகுதியில் வசித்து வந்த ஜோதி என்ற பள்ளி மாணவியும் இந்த பூகம்பத்தில் சிக்கினார்.


இடிபாடுகளுக்குள் புதைந்து குற்றுயிரும், குலை உயிருமாக கிடந்த ஜோதியை, பாதுகாப்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.மருத்துவமனைக்கு சென்ற ஜோதிக்கு அதிர்ச்சியான செய்தி காத்திருந்தது. இடுப்பு எலும்பில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டதால், இனிமேல் அவரால் நடக்கவோ, உட்காரவோ முடியாது என டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த செய்தி ஜோதியின் காதுகளில் இடியாக இறங்கியது. நடை பிணமாக இருப்பதற்கு பதிலாக, பூகம்ப இடிபாடுகளுக்குள் புதைந்து போயிருக்கலாமே என கண்ணீர் வடித்தார்.


அப்போது அவரது பள்ளித் தோழரான ஜெயேஷ் மருத்துவமனைக்கு வந்தார். ஜோதிக்கு ஆறுதல் கூறினார். ஆண்டுகள் உருண்டோடின. ஜெயேஷ் அடிக்கடி மருத்துவமனைக்கு வந்து ஜோதியை பார்த்துச் சென்றார்.மற்றொரு மருத்துவமனையில் ஜோதியின் இடுப்பில் சிறிய பெல்ட் பொருத்தப்பட்டது. அதன் உதவியுடன் அவரால் சில நிமிடங்கள் உட்கார முடிந்தது. இருந்தாலும், நடப்பது என்பது கனவாகப் போய் விடுமோ என தினமும் அழுது புலம்பினார்.


இந்த நிலையில் தான், இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஜோதியை பார்க்க வந்த ஜெயேஷ், தனது மனதில் இருந்த ஆசையை அவரிடம் வெளிப்படுத்தினார்.இதுபற்றி ஜெயேஷ் கூறியதாவது:மருத்துவமனையில் ஜோதியை சந்தித்தேன். நீண்ட நாட்களாக அடக்கி வைத்திருந்த காதல் ஆசையை வெளிப்படுத்தினேன். எந்த சூழ்நிலையில் இருந்தாலும் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என ஜோதியிடம் வாக்குறுதி அளித்தேன். ஆனால், இதை ஜோதி ஏற்கவில்லை.என் வாழ்க்கை முடிந்து போய்விட்டது. உங்கள் வாழ்க்கை பாதிக்கப்படுவதை நான் விரும்பவில்லை என ஜோதி கூறினார்.


தொடர்ந்து வற்புறுத்தியதை அடுத்து, என் காதலை ஜோதி ஏற்றுக் கொண்டார். இதற்கு பின், ஜோதியின் மனதில் புதிய நம்பிக்கையும், உறுதியும் ஏற்பட்டது. என் வேண்டுகோளை ஏற்று, இரண்டாவதாக அறுவை சிகிச்சை செய்து கொள்ள ஒப்புக் கொண்டார். இப்போது அவரால் ஐந்து நிமிடங்கள் வரை நடக்க முடிகிறது.விரைவில், அவர் முழுமையாக குணமடைந்து விடுவார். எங்கள் காதல் அவரை குணப்படுத்தி விடும். இந்த ஆண்டுக்குள் எங்கள் திருமணம் நடக்கும். எங்கள் காதல் பயணம் உற்சாகத்துடன் தொடரும்.இவ்வாறு ஜெயேஷ் கூறினார். :acumen