News:

Choose a design and let our professionals help you build a successful website   - ITAcumens

Main Menu

தேர்வு நடத்துவதிலும் 'அவுட்சோர்சிங்'

Started by VelMurugan, Jan 10, 2009, 05:57 PM

Previous topic - Next topic

VelMurugan

தேர்வு நடத்துவதிலும் 'அவுட்சோர்சிங்' : தமிழக பல்கலை முதலில் சாதனை

புதுடில்லி : பல்கலைக்கழக தேர்வுகளை "அவுட் சோர்சிங்' முறையில் நடத்தும் திட்டத்தை, இந்தியாவிலேயே முதன் முறையாக, கோவை அண்ணா பல்கலைக்கழகம் நடத்த ஆரம்பித்துள்ளது. வெளிநாட்டு நிறுவனங்களின் வேலையை, இந்தியாவில் உள்ள "பிசினஸ் ப்ராசஸ் ஆப் அவுட்சோர்சிங்' என்று அழைக்கப்படும் "பிபிஓ'க்கள் செய்வது போல, இந்தியாவிலும், பல நிறுவனங்கள் மட்டுமின்றி, கல்வி உட்பட பல துறை சார்ந்த அமைப்புகளும் தங்கள் பணிகளை "அவுட்சோர்சிங்' முறையில் நடத்த ஆரம்பித்துள்ளன. கல்வித்துறையில் "அவுட்சோர்சிங்' முறையை அதிக அளவில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு எண்ணினாலும், அதை செயல்படுத்த பல கல்வி நிறுவனங்கள் இன்னும் முன்வரவில்லை.


கோவையில் ஆரம்பிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 107 பொறியியல் கல்லூரிகள் உள்ளன; அவற்றில் ஆண்டுக்கு 32 ஆயிரம் பேர் படிக்கின்றனர். இவர்களின் செமஸ்டர் உட்பட எல்லா தேர்வுகளையும் "அவுட்சோர்சிங்' முறையில் வேறொரு நிறுவனம் மூலம் நடத்த பல்கலைக் கழகம் முடிவு செய்துள்ளது.


இதற்காக, ஒருங்கிணைந்த கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்துடன் கூடிய சாப்ட்வேர் முறையும் பின்பற்றப் படுகிறது. பெங்களூருவை சேர்ந்த "மைண்ட்லாஜிக்ஸ் இன்போடெக்' நிறுவனம் வடிவமைத்து தந்துள்ளது. மாணவர்களின் தேர்வுத்தாளில் மதிப்பெண் போடுவது, அதை சரிபார்ப்பது, அவற்றை பாதுகாப்பாக வைப்பது போன்ற விஷயங்களை இந்த முறையின் மூலம் கம்ப்யூட்டரில் பாதுகாக்க முடியும். மாணவர்களின் "ஆன்-லைன்' பதிவு உட்பட பல மேலாண்மை சம்பந்தப்பட்ட சேவைகளுக்கும் இந்த தொழில்நுட்ப முறையை பயன்படுத்த பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. "இது ஒரு புதுமையான முயற்சி தான். எங்களால் முடியும் என்பதால், கம்ப்யூட்டர் தொழில்நுட்ப முறையின் உதவியுடன், வெளி நிறுவன ஒத்துழைப்பை பெற்று தேர்வுகளை நடத்துகிறோம். பல வகையில் செலவு குறையும் என்பதால், இந்த முயற்சி நல்ல பலன் தரும் என்று எதிர்பார்க்கிறோம்' என்று பல்கலைக்கழக துணை வேந்தர் ராதாகிருஷ்ணன் கூறினார்.


பெங்களூரு நிறுவனத்துடன் பல்கலைக்கழகம் ஐந்தாண்டு ஒப்பந்தம் போட்டுள்ளது. இதன்படி, தேர்வுகளை நடத்துவது, மதிப்பெண் களை சரிபார்ப்பது, பராமரிப்பது போன்ற பணிகளை இந்த நிறுவனம் செய்து தரும். தேர்வை பொறுத்தவரை, மாணவர் ஒருவருக்கு தலா 75 ரூபாய் வீதம் நிறுவனத்துக்கு சேவை கட்டணமாக பல்கலைக்கழகம் அளிக்கும்.


"பல்கலைக்கழக மாணவர்களுக்கான தேர்வு நடத்துவது, மதிப்பெண் பராமரிப்பது போன்ற பணிகளுக்காக இந்த தொழில்நுட்ப முறையை நாங்கள் உருவாக்கி உள்ளோம். கோவை பல்கலைக்கழகம் போலவே, இன்னும் எட்டு பல்கலைக்கழகங்களுடன் பேசி வருகிறோம். அவர்களுக்கும் தேர்வுகளை நடத்தும் பணிகளை செய்வோம்' என்று மைண்ட்லாஜிக்ஸ் நிறுவன தலைவர் அலோக் பராயா கூறினார்.

Source :  தினமலர்