இல‌ங்கை‌த் த‌மிழ‌ர் ‌பிர‌ச்சனை: செ‌ன்னை‌

Started by Kalyan, Oct 24, 2008, 10:30 AM

Previous topic - Next topic

Kalyan

இல‌ங்கை‌த் த‌மிழ‌ர் ‌பிர‌ச்சனை: செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று ‌‌பிரமா‌ண்ட ம‌னித‌ச்ச‌‌ங்‌‌கி‌லி!

இலங்கைத் தமிழர் பிரச்சனையில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க சென்னையில் இ‌ன்று ‌பிரமா‌ண்ட மனிதச்சங்கிலி அணிவகுப்பு நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இந்த மனிதச்சங்கிலி அணிவகுப்பைத் தொடங்கி வைத்து, அணிவகுப்பு நிறைவடையும் இடம் வரை முதல்வர் கருணாநிதி பார்வையிடுகிறார்.

இ‌ந்த மனிதச்சங்கிலி அணிவகுப்பை அ.இ.அ.தி.மு.க, ம.தி.மு.க, தே.மு.தி.க, பா.ஜ.க ஆகிய கட்சிகள் புற‌க்க‌ணி‌‌த்து‌ள்ளன.

தி.மு.க, பா.ம.க, இடதுசாரிக் கட்சிகள், பு‌திய த‌மிழக‌ம், ‌விடுதலை‌ச் ‌சிறு‌‌த்தைக‌ள், ஆசிரியர், அரசு அலுவலர் சங்கங்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்கின்றனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வண்டலூர் வரை மனிதச்சங்கிலி அணிவகுப்புக்கு முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. இப்போது, செங்கல்பட்டையும் தாண்டி அணிவகுப்பு திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த 14ஆ‌ம் தேதி நடைபெற்ற அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற கட்சிகள் அனைத்தும் இந்த மனிதச்சங்கிலி அணிவகுப்பில் பங்கேற்கின்றன.

மனிதச் சங்கிலி அணிவகுப்புக்கு தமிழக காங்கிரஸ் கட்சி தார்‌‌மிக ஆதரவு அளித்துள்ளது.