தமிழகம் முழுவதும் இன்று 'லேப்-டாப்' கண்காட

Started by dhilipkumar, Oct 14, 2008, 08:40 PM

Previous topic - Next topic

dhilipkumar




சென்னை : தமிழக அரசின் "எல்காட்' நிறுவனம் "லேப்-டாப்' (மடிக்கணினி) கண்காட்சியை தமிழகம் முழுவதும் இன்று நடத்துகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு "லேப்-டாப்'களை விற்பதற்காக "எல்காட்' நிறுவனம், "மாணவர் லேப்-டாப் திட்டம்' என்பதை துவக்கி உள்ளது. 28 ஆயிரத்து 297 ரூபாய் முதல் 30 ஆயிரத்து 497 ரூபாய் வரை சர்வதேச தரத்திலான "லேப்-டாப்'களை வாங்கி, இந்நிறுவனம் விற்கிறது. இவற்றை இயக்கிப் பார்த்து, வாங்குவது குறித்து முடிவு எடுக்க "லேப்-டாப்' கண்காட்சியை "எல்காட்' நிறுவனம் அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களிலும் இன்று நடத்துகிறது.



சென்னையில் நந்தனம் பெரியார் மாளிகையில் உள்ள அலுவலகத்தில் தரைதளத்தில் 300 மடிக்கணினிகளைக் கொண்டு இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது. இதில் மாணவ, மாணவியர், பத்திரிகைத் துறையினர், அரசு அலுவலர்கள், முன்னாள் மற்றும் இந்நாள் ராணுவத்தினரின் குடும்பங்கள், கல்வி நிறுவனங்கள், கல்வித் துறையைச் சேர்ந்தவர்கள் இவற்றை பார்வையிட்டு அங்கேயே "லேப்-டாப்' வாங்க முன்பதிவு செய்யலம் என "எல்காட்' மேலாண்மை இயக்குனர் உமாசங்கர் குறிப்பிட்டுள்ளார்.


NAREN

nice games here