News:

Choose a design and let our professionals help you build a successful website   - ITAcumens

Main Menu

Is Sanjay Dutt out of KGF2? - Producer Description Producer Translations of prod

Started by Kumar G, Aug 14, 2020, 12:40 PM

Previous topic - Next topic

Kumar G

கேஜிஎஃப் 2 படத்திலிருந்து சஞ்சய் தத் விலகிவிட்டாரா? - தயாரிப்பாளர் விளக்கம்



பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு 8ஆம் தேதி கடும் மூச்சுத் திணறல் மற்றும் லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது. அவர் உடனடியாக மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், 10ஆம் தேதி அவரது உடல்நலம் சீராகி வீடு திரும்பினார். சஞ்சய் தத் விரைவில் குணமடைய வேண்டி திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஆகியோர் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வந்த நிலையில் அவர் தன்னுடைய உடல்நலம் மற்றும் திரைப்பயணம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

அதில், "வணக்கம் நண்பர்களே... சில மருத்துவ சிகிச்சைக்காக நான் என் வேலையில் இருந்து ஒரு குறுகிய கால ஓய்வு எடுத்துக்கொள்கிறேன். எனது குடும்பத்தினரும் நண்பர்களும் என்னுடன் இருக்கிறார்கள். கவலைப்படவோ அல்லது தேவையின்றி யூகிக்கவோ வேண்டாம் என்று எனது நலம் விரும்பிகளைக் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் அன்பு மற்றும் வாழ்த்துகளுடன், நான் விரைவில் மீண்டும் வருவேன்" எனக் கூறியுள்ளார்.

அவருடைய உடல்நிலையில் உள்ள பிரச்சனை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியானாலும், அதிகாரபூர்வமாக எதுவுமே உறுதிப்படுத்தப்படவில்லை. மருத்துவ காரணங்களுக்காக திரையுலகிலிருந்து சில காலம் விலகுவதாக சமூக வலைதளத்தில் சஞ்சய் தத் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் சஞ்சய் தத் நான்காம் கட்ட நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவருக்கு லீலாவதி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பலரும் சஞ்சய் தத்திற்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது சஞ்சய் தத் கேஜிஎஃப் 2 படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இந்நிலையில் இப்படி ஒரு அறிவிப்பை சஞசய் தத் வெளியிட்டுள்ளதால் இப்படத்திலிருந்து விலகிவிட்டதாக செய்திகள் உலா வருகின்றன.

இந்நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் கேஜிஎஃப் தயாரிப்பாளர் பேசுகையில், "மூன்று மாதங்களுக்கு பிறகு சஞ்சய் தத் பணிக்கு திரும்புவார். சஞ்சய் தத் இப்போது சிகிச்சையில் இருப்பதாகவும், சிகிச்சை முடிந்த பின் படத்தை முடித்து தருவதாகவும், அவரது குழு என்னிடம் பேசியது. இன்னும் 3 நாட்கள் வேலையே உள்ளது, அவை நீட்டிப்பு காட்சிகள்" என்று தெரிவித்துள்ளார்.



Source : https://www.nakkheeran.in/cinema/cinema-news/producer-about-sanjay-dutt-kgf-movie