News:

Latest Movie Updates : Cinebuzz.in
Latest Update on Rajini Movie  Enthiran / Endhiran - Rajini - The Robot

Main Menu

like grapes

Started by dhoni, Apr 03, 2015, 02:05 PM

Previous topic - Next topic

dhoni

ராமேசுவரம்,

'பச்சைத்திராட்சை' போல் தோற்றம் அளிக்கும் அரியவகை கடல் பாசிகள் தங்கச்சிமடம் கடற்கரைப்பகுதியில் ஒதுங்கிக்கிடக்கின்றன.

அரிய வகை

ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதிகளான மன்னார் வளைகுடாவிலும், பாக்ஜலசந்தியிலும் அரியவகை கடல் பாசிகள், பவளப்பாறைகள் அதிக அளவில் காணப்படுகின்றன.

தற்போது, ராமேசுவரம் வடகாடு கடல் பகுதியில் இருந்து தங்கச்சிமடம் வில்லூண்டி தீர்த்த கடற்கரை வரையிலும் 'பச்சைத் திராட்சை' போல் தோற்றம் அளிக்கும் பச்சைப் பாசிகள் அலையில் அடித்து வரப்பட்டு அதிக அளவில் கரை ஒதுங்கி வருகின்றன.

இது பற்றி வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

'சர்காசம்'

ராமேசுவரம் கடல் பகுதியில் மட்டும் 10 வகையான கடல் பாசிகள் உள்ளன. பச்சைத் திராட்சைப் பழம் போல் கொத்துக் கொத்தாக கடற்கரையில் ஒதுங்கிக் கிடக்கும் பாசி, 'சர்காசம்' என்று அழைக்கப்படும்.

இந்த வகை பாசிகள் கடற்பாறை, பவளப்பாறைகளின் மீது படர்ந்து நிற்கும். அலைகள் வேகமாக அடிக்கும் போது பாறைகளில் இருந்து விடுபட்டு கடல் நீரோட்டத்தின் போக்கில் கரையில் வந்து ஒதுங்கும். இந்த வகை பாசியில் ஒரு வித வேதிப் பொருள் உள்ளது. தோல் தொழிற்சாலைகளுக்கும், துணி பதனிடும் தொழிற்சாலைகளுக்கும் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. மீனவர்கள் இவற்றை சேகரித்து உலர வைத்து தேவைப்படும் கம்பெனிகளுக்கு அனுப்பி வைப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.