எதிர்நீச்சல் போட்டபடி, வாழ்க்கைச் சக்கரத்தை உருட்டிக்கொண்டும், எது வந்தாலும் கலங்காமல் எதிர்த்து வாழ்ந்து வரும் 12 ராசிகளில் முதன்மையான ராசியாகிய மேஷ ராசி நேயர்களே! புத்தாண்டு வாழ்த்துகளோடு உங்களின் 12 மாத காலங்கள் எப்படி இருக்கும் என்பதை தெளிவாகக் காணலாம்.
படிப்பிலும் சரி, உத்தியோகத்திலும் சரி, செய் தொழிலிலும் சரி, பொதுநல சங்கங்களிலும் சரி, அரசியல் கட்சிகளிலும் சரி, தெய்வீக திருகோவிலின் நிர்வாகத்திலும் சரி, எதிலும் முதலிடம் முதல் மரியாதையும் கிடைப்பதற்கான உள் மனம் படைத்தவர் நீங்கள். உங்களை சுற்றி நண்பர்கள் வட்டம், உறவினர் வட்டம் என்று இருந்து வரும். ஆனாலும் அவர்களை சார்ந்து வாழ விரும்பமாட்டீர்கள். அவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்ய நினைப்பீர்கள். மனைவியிடம் அதிகமான பாசம், பற்று இருந்து வரும்.
கடன் தொல்லை, வட்டியினால் விரோதம், கோர்ட், நோட்டீஸ், திடீர், திடீர் என உடல் ஆரோக்கியக் குறைவால் மருத்துவச்செலவு, கணவன்-மனைவிக்குள் போராட்டம், சொந்தக்காரர்களால் மனவேதனை, எதிலும் பிரச்சினை, அவமானம், தோல்வி என்று சந்தித்து கொண்டு மிக மோசமான சூழ்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்வரை இருந்து வந்த உங்களுக்கு 2009- புத்தாண்டு பலனை பார்க்கும் பொழுதும், வரும் 1.1.2009-ல் மிக முக்கிய கிரகங்களாக குருபகவான் 10-ம் பாவத்திலும், சனீஸ்வரன் 5-ம் பாவத்திலும், ராகு 10-ம் பாவத்திலும் கேது 4-ஆம் பாவத்திலும் கிட்டத்தட்ட 11-மாதங்கள் சஞ்சாரம் செய்து வருவதாலும் நீண்ட கால கிரகங்களான சனி, குரு, ராகு, கேது, குறுகிய கால கிரகங்களான சூரியன், புதன், சுக்கிரன், போன்றவைகளின் ஆதிபத்தியம் ஆதிக்கம், பார்வை, யோகங்கள் போன்றவைகளையும் கணித்து பார்க்கும் போது இனிமேல் தற்போது பணவரவு பெருகும். செலவும், செல்வாக்கும் கூடும். மதிப்பும், மரியாதை ஏறும். தொழில் வாய்ப்பில் மாற்றம் ஏற்படும். வேலை இல்லாமல் இருந்தோருக்கு வேலை கிடைக்கும். படித்துவிட்டு சரியான தகுதியான வேலை கிடைக்கவில்லையே என்று கவலைப்பட்டு வருவோருக்கு நீங்கள் எதிர்பார்த்தபடியே, வெளியூர், வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து சிறப்பு அழைப்பு, திடீர் என வந்து உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் மகிழ்ச்சியில் குளிப்பாட்டும்.
நட்சத்திரங்கள் : அசுவினி, பரணி, கார்த்திகை 1-ஆம் பாதம்
பெயர் எழுத்துக்கள் : சு, சே, சோ, ல, லி, லு, லே, லோ, அ.
சிறப்பான மாதங்கள் : ஜனவரி, பிப்ரவரி, மே, ஆகஸ்ட், செப்டம்பர்.